பாஜகவின் முக்கிய புள்ளிகள் கட்சியிலிருந்து நீக்கம்.. பொது செயலாளர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சிறுபான்மையினர் பற்றியும், முகமது நபி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் டெல்லி பாஜக தலைவர் நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மதங்களையும் பாஜக மதிப்பதாகவும், எந்த ஒரு மதமும் இழிவுபடுத்துவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்துபவர்களை பாஜக ஊக்குவிக்காது என தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பாஜகவின் இந்த நடவடிக்கை நாட்டை மாற்ற முயற்சி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பாஜக கருத்து அப்பட்டமான போலியான கருத்து என்றும், இது வெளிப்படையாக கேலிக் கூத்து என்றும், நாட்டை கட்டுப்படுத்துவதற்கான மற்றொரு முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bjp members dismissal for party


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->