அண்ணாமலையின் அரசியல் ஸ்டண்ட்.. கண்டுகொள்ளாத பாஜக தலைவர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் ரஃபேல் வாட்ச் பில், திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் குறித்தான ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கடந்த சில மாதங்களாக தெரிவித்து வந்தார். அதன்படி நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் பில், திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார்.

அண்ணாமலையின் இத்தகைய செயலுக்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை திமுக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த ஆவணங்களை 15 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை தமிழகத்தை இதுவரை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இத்தகைய செயலால் அதிமுக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உண்டாகியுள்ளது. 

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இத்தகைய செயலை பாஜக தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களில் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலை அணிவித்தது குறித்தான பதிவை மட்டுமே வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் இத்தகைய செயல் குறித்து எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.

அதேபோன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது அன்றாட செயல்பாடு குறித்தும் விஷு அஷாம்ஷகள் என்று மலையாளத்தில் வாழ்த்து மட்டுமே வெளியிட்டு இருந்தார். 

மேலும் நேற்று கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் ஊழல் பட்டியல் மற்றும் ரஃபேல் வாட்ச் பில் குறித்தான கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் செய்தியாளர்களின் கேள்விகளை தவிர்த்தார். 

அதேபோன்று பிரபல நடிகரும் இயக்குனரும் பாஜக ஆதரவாளருமான எஸ்.வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் "என்ன பரீட்சை எழுதி என்ன பிரயோஜனம். புக்கை பார்த்து தான் எழுதினதா சொன்னாங்க. கடைசீல 10 வருஷ பழைய ஆனந்த விகடன் நக்கீரன் பார்த்து எழுதின மாதிரி இருக்கு" எனவும்,

என்னங்க அந்த பையன் பாஸ் பண்ண வாய்ப்பே இல்லையே. ஏங்க..? இன்னைக்கு கேள்வி பேப்பர் கொடுத்தா அடுத்த வாரம் தான் பதில் சொல்லுவேங்கிறான்." என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பங்கமாக கலாய்த்து இருந்தார். இதன் மூலம் தமிழக பாஜக தலைவர்களே அண்ணாமலையின் அரசியல் ஸ்டண்டை ரசிக்கவில்லை அல்லது கண்டு கொள்ளவில்லை என்றே கூறலாம்.

சில தினங்களுக்கு முன்பு பாஜக ஐடி விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அண்ணாமலை திமுக அமைச்சர்களுடன் ரகசிய உறவில் இருந்து வருவதாக குற்றம் சாட்டி கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து பல நிர்வாகிகள் தொடர்ந்து அண்ணாமலை மீது குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leaders ignore annamalai corruption allegations against DMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->