பண்ணை வீட்டில் பலான தொழில்.. வீடு முழுவதும் ஆணுறை, மது பாட்டில்கள்.. பாஜக தலைவர் கைது.!
BJP leader run prostitute business in assam
அசாம் மாநிலத்தில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தனது பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அசாம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு என்பவருக்கு மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பா.ஜ.க நிர்வாகி வீடு என்பதால் காவல்துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மராக் ரிம்பு பண்ணை வீட்டில், தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்
அந்த சோதனையில் வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேரை மீட்ட போலீஸார் அவர்களை குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பண்ணை வீட்டை பூட்டில் சீல் வைத்தனர்.

மேலும் குழந்தைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் உட்பட 73 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட வடிவமைப்பை பார்க்கும் போது, மராக் ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொழில் செய்வற்காகவே விடுதி போல நடத்தி வந்தது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, கட்டுகட்டாக ஆணுறைகள் மற்றும் மதுபான பாட்டில், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
BJP leader run prostitute business in assam