சிக்கலில் திமுக அரசு.. ஆளுநரை சந்திக்கப் போகும் முக்கிய புள்ளி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மரியதாஸ் கைது விவகாரம் பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பயனளிக்கவில்லை என்பவர் பாஜக கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த கட்டமாக மரியதாஸ் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் தமிழக பாஜக முக்கிய முடிவுக்கு வந்துள்ளது. அதாவது இன்று 12:30 மணியளவில் ஆளுநர் ஆர் என் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பில் குண்டர் சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கேட்பார் என கூறப்படுகிறது. 

இதற்கிடையே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக திமுக அரசு பதிவு செய்து வரும் வழக்குகளை எதிர்த்து இன்று காலை 10:3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நுழைவுவாயில் சமூக ஊடகங்களின் மாநில தலைவர் நிர்மல் குமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader annamalai meet tn governor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->