பாஜக அரசு அநாகரீகத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது!" – அடக்குமுறைகளுக்கு எதிராக கொந்தளித்து அறிக்கை விட்ட மாணிக்கம் தாகூர் - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக குரல் எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததன் மூலம் மத்திய அரசு ஜனநாயக மரபுகளை மீறியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,"நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடியின் இல்லம் அருகே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனநாயக வழியில் போராடிய அவர்களை காவலர்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பில் உள்ள ராகுல் காந்தியிடம் மத்திய அரசு இத்தகைய அநாகரிகமான முறையில் நடந்துகொண்டு கைது செய்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்களுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர், உடல்நலக் குறைவு காரணமாக சில நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே நாளில், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் தங்களது கோரிக்கைகளை அமைதியான ஊர்வலத்தின் மூலம் வெளிப்படுத்தும் உரிமையே போராட்டக்காரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.காவலர்கள் நடத்திய தடியடியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் காயமடைந்தனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் போராட்டக் களத்தில் நேரடியாக நின்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியது ஆட்சியாளர்களுக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் எழுச்சியையும், அவர்களின் நியாயமான போராட்டத்தையும் சகித்துக்கொள்ள முடியாத பாஜக அரசு, அடக்குமுறை நடவடிக்கைகளை ஏவி வருகிறது.

ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான இத்தகைய நடவடிக்கைகள் சர்வாதிகார ஆட்சிகளில் மட்டுமே காணப்படும்.ஆனால், மாணவர்களின் போராட்டத்தை அதிகார பலத்தைக் கொண்டு ஒடுக்க முயலும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு, எதிர்காலத்தில் மிகப்பெரிய அரசியல் விலையைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்" என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP government gone limits indecency Manickam Thakur who issued statement protest against repression


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->