ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமில்லையா..? முதல்வர் மு.க ஸ்டாலினை சாடிய பாஜக நிர்வாகி..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வணக்கன்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் சட்ட விரோத பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் டிஎஸ்பி தீபக் ரஜினியின் தனிப்படை போலீசார் இருவர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கள்ளத்தனமாக மதுவிற்ற பரிமளம் என்பவரை பிடித்து இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றனர்.

அந்த சமயத்தில் சம்பவ இடத்திற்கு வந்த திமுக நிர்வாகியான மதியழகன் என்பவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து ஒ போலீசாரை வழிமறித்து தனக்கு அமைச்சர் வரை செல்வாக்கு உண்டு எனக் கூறி மிரட்டினார். போலீசார் கையும் களவுமாக பிடித்த வியாபாரி பரிமளத்தை விடுவிக்க முயன்றார். 

மேலும் தனிப்படை போலீசாரை ஆபாசமாக பேசி செருப்பை எடுத்து மதியழகன் அடிக்கப்பாய்ந்தார். இதனை காவலர் ஒருவர் செல்போனில் படம் பிடித்ததால். தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்த மதியழகன் மது விற்றவரை தாக்குவது போல நடித்துள்ளார். இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்த தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கள்ள சரக்கு விற்கும் மதியழகன் எனும் தி.மு.க பொறுக்கி அமைச்சர் பெயரை சொல்லி காவல்துறை அதிகாரியை மிரட்டுகிறான். செருப்பை எடுத்து காவல் அதிகாரியை அடிக்கிறான். இந்த லட்சணத்தில் கட்சிக்காரர்களை வைத்துக் கொண்டு கூச்சமின்றி ஊருக்கு உபதேசம் சொல்ல வெட்கமாக இல்லையா தமிழக முதல்வரே திரு. மு.க ஸ்டாலின்? இந்த தி.மு.க பொறுக்கி மீது நடவடிக்கை எடுக்க திராணி இருக்கிறதா முதல்வரே?

எப்பேற்பட்ட கேடுகெட்ட பண வெறி பிடித்த தி.மு.க மூடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும். இதுபோன்ற கேடுகெட்ட பொறுக்கி தி.மு.க ரவுடி கும்பலுக்கு சேவகம் செய்வதை தமிழக காவல்துறை தயவு செய்து விட்டுவிட்டு, மக்கள் பக்கம் நிற்க வேண்டும். வரலாறு பார்த்திடாத அதர்மத்துக்கு துணை போய் தூக்கத்தை இழக்காதீர்கள்" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp executive SG Surya criticized MKStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->