பிப்ரவரி-15 முதல் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி! பரபரப்பை கிளப்பிய பாஜக! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து அரசியல் செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவி ஏற்றதில் இருந்து திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாகவும் ஆளுநர் ஆர்.என் ரவி பேசி வருவதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

ஆளுநர் ஆர்.என் ராவியின் செயலுக்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்துத்துவா சித்தாந்தம் கொண்ட அமைப்புகளும் ஆதரவாக பேசி வரும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும் என பாஜக நிர்வாகி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக பாஜக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் பேசியதாவது " பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் ஆளுநரின் ஆட்சி அமல்படுத்தப்படும். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலும் நடைபெறும். அதை நான் உறுதியாக நம்புகிறேன்"பாஜக நிர்வாகிகள் மத்தியில் கே.பி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP executive said Governor rule in TN on February


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->