விஜயின் த.வெ.க.வை பா.ஜ.க. குறைத்து மதிப்பிடவில்லை...! - நயினார் நாகேந்திரனின் ஸ்டேட்மெண்ட்
BJP does not underestimate Vijays TVk Nayinar Nagendrans statement
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பல அரசியல் கேள்விகளுக்கு தன்னுடைய பதில்களை துல்லியமாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு செய்தார்.
அவர் தெரிவித்ததாவது,“டி.டி.வி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் என்.டி.ஏ கூட்டணியில் சேர்வார்களா என்பது குறித்து காலமே தீர்ப்பு வழங்கும், யாரும் முன்கூட்டியே கணிக்க முடியாது,” என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து,“அமைச்சர் சேகர்பாபு கூறியது உண்மையே, பா.ஜ.க.வில் ஒரு பதவியின் அதிகபட்ச காலம் மூன்று ஆண்டுகள் தான். ஆனால் சிறப்பு சூழ்நிலையில் அது நீட்டிக்கப்பட வாய்ப்பு உண்டு” என்றார்.
அதே சமயம்,“தி.மு.க.வின் சேகர்பாபு பா.ஜ.க. குறித்து கருத்து கூறுவதற்கான நியாயமும் தேவையும் இல்லை” என்று சாடினார்.மேலும்,“அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை,சூழ்நிலைகள் தீர்மானிக்கும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
நடிகர் விஜய் தொடங்கிய த.வெ.க. குறித்து கேட்கப்பட்டபோது,“நாங்கள் த.வெ.க.வை எளிதில் மதிப்பிடவில்லை. ஆனால் அது இன்னும் ஒரு தேர்தல்கூட சந்திக்கவில்லை என்பதும் உண்மை” எனத் தெரிவித்தார்.
English Summary
BJP does not underestimate Vijays TVk Nayinar Nagendrans statement