தமிழக பாஜகவிற்கு நான்கு தலைவர்களை நியமித்த பாஜக!   - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்க பட்ட பிறகு அந்த இடமானது தற்போது வரை காலியாக இருக்கிறது. 

இந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல அறிவிக்கப்பட்ட இருப்பதால் தமிழக பாஜகவிற்கு தலைமை தேவை என்பதால் புதிய பொறுப்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த சூழ்நிலையில் தலைவராக நியமிக்காமல் பொறுப்பு தலைவர்களாக 4 பேரை நியமித்து பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது எனவும்,  அதன்படி முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இல கணேசன் வானதி சீனிவாசன் எம் ஆர் காந்தி ஆகிய 4 பேரும் தமிழக பாஜகவின் பொறுப்பு தலைவர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இவர்கள் நான்கு பேரும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் அக்கட்சியின் தலைமையில் இருந்து அதிகார்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announced tamilnadu bjp Head for temporary


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->