பாலுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை! திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர்! - அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


தமிழக விவசாயிகள் மற்றும் பால் முகவர்கள் விலைவாசி உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி உள்ளது. தமிழக அரசு கொள்முதல் செய்யும் பசும் பாலின் கொள்முதல் விலை ரூ.32 லிருந்து ரூ.35ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை ரூ.41 லிருந்து ரூ.44ஆகவும் நிர்ணயப்பட்டுள்ளது. 

அதே போன்று வணிகரீதியில் விற்பனை செய்யப்படும் பாலின் விலையில் மட்டும் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் நுகர்வோர் வாங்கும் நீளம் மற்றும் பச்சை நிற பாக்கெட் விலை உயர்த்தப்படாது என அறிவிக்கப்பட்டது. ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் அதிக கொழுப்பு கொண்ட ஆரஞ்சு நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.12.உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை உயர்வு குறித்து பல்வேறு தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்பொழுது வரலாற்றில் இல்லாத நிகழ்வாக மத்திய அரசு பாலுக்கு ஜிஎஸ்டி வரி போட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பால்வளத் துறை அமைச்சர் நாசரை விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "இப்படிப்பட்ட அமைச்சர்களின் வாய் கோளாறினால் தான் தமிழக அரசு நிர்வாகக் கோளாறால் சிக்கி தவிக்கிறது. பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கி இருப்பது கூட தெரியாதவர் தான் திறனற்ற திமுக ஆட்சியின் பால்வளத்துறை அமைச்சர். பொறுப்பற்ற முறையில் பொய்களை சொல்லாமல் பால் விலை உயர்வை திறனற்ற திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என காட்டமாக பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai reply to Minister Nasar about gst


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->