அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு.. தொண்டர்களிடம் மன்னிப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பாஜக கட்சியின் பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியல் சாசன சமர்ப்பண நாள் மற்றும் பஸ்தி சம்பார்க் அபியான் நிறைவு நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாநில பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சரவணகுமார் வரவேற்று பேசினார்.

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக தொண்டர்கள் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், அவர் கடைசி வரை அவர் வரவே இல்லை. 5000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவித்திருந்த நிலையில் 800 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். 75 சதவீத இருக்கைகள் காலியாக கிடந்தது.

இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் 'நேற்று சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக கட்சித் தொண்டர்கள், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவால் என்னால் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அதற்காக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai explained didn't participate Chidambaram meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->