வாங்க.. வாங்க.. "கூட்டணி கதவு" திறந்தே இருக்கு.. அழைப்பு விடுக்கும் அண்ணாமலை.!!
bjp Annamalai calls for alliance
நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அண்ணாமலை "மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் முக்கியமானது. பாஜகவினர் களத்தில் தேனீக்கள் போல உழைக்க வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணிக் கதவு திறந்தே உள்ளது. கூட்டணிக்கு யாரும் வரலாம்" என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார் அண்ணாமலை. ஜனநாயக கூட்டணியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் அமைப்பு பொதுச் செயலர் கேசவவிநாயகம், மாநில துணைத் தலைவர்கள் வி.பி துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநிலச் செயலர் வினோஜ் பி.செல்வம், பாஜக அமைப்பாளர் கரு. நாகராஜன், இணை அமைப்பாளர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர்கள் தனசேகர், விஜய் ஆனந்த், மத்திய சென்னை மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
English Summary
bjp Annamalai calls for alliance