அண்ணாமலை கருத்து பாஜகவின் கருத்து இல்லை - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
BJP Annamalai ADMK Tamilisai
அ.தி.மு.க. குறித்து பாஜகவின் அண்ணாமலை விமர்சித்தது குறித்து, அது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்றும், அவரது தனிப்பட்ட கருத்தே என்றும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக கூட்டணி உறுதியாக உள்ளது என அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், கூட்டணிக் கட்சியினரே அதில் குழப்பம் தெரிவித்துவருகிறார்கள்.
கொடியேற்ற அனுமதி கேட்பதற்கே இடையூறு இருப்பதாக திருமாவளவனே சொன்னுள்ளார். திமுக இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் கூட்டணிக் கட்சிகள் கூறுகின்றனர். கூட்டணிக்குள்ளேயே கேள்விகள் எழுகிற நிலையில், மக்கள் மத்தியில் அதுவே எதிரொலிக்கப்போகிறது,” என்றார்.
அதே நேரத்தில், “அ.தி.மு.க–பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் சொல்லும் கருத்துகளே பாஜகவின் நிலை. அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட பார்வை. அதை விமர்சிப்பதில் நான் ஈடுபட விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றார்.
English Summary
BJP Annamalai ADMK Tamilisai