நள்ளிரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை: டிடிவி-க்கு 4, ஓபிஎஸ்-க்கு 4 தொகுதிகள்? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில் போட்டியிடும் தொகுதிகள் குறைத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 

இதற்கிடையே பா.ஜ.க கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக டி.டி.வி. தினகரனும், ஓ. பன்னீர்செல்வமும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் சென்னை, கிண்ணியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நள்ளிரவு பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்த டி.டி.வி. தினகரன் மற்றும் ஓபிஎஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இந்த பேச்சுவார்த்தையில் அமமுகவுக்கு 4 தொகுதிகளும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP alliance TTV OPS constituencies 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->