ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்: 20 மாநில முதல்வர், துணை முதல்வர்கள் பங்கேற்பு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து, மோடி மூன்றாவதாக பிரதமராக பதவியேற்றார். இருந்தும் பாஜக தனிப் பெரும்பான்மை பலத்தை பெறவில்லை. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 20 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பபங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதோடு, இதுதொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும், மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டு நிறைவு, சர்வதேச யோகா தினத்தின் 10-வது ஆண்டு விழா நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP alliance chief ministers meeting which is part of the Democratic Alliance


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->