சென்னைக்கு வரும் அமித் ஷா..! அதிமுக - பாஜக கூட்டணியில் இணையும் முக்கிய கட்சிகள்!
BJP ADMk Alliance Amit shah EPS OPS
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, அரசியல் சூழல் தீவிரமாக மாறி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15 அன்று தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பாஜக தீவிர திட்டமிடல்களில் ஈடுபட்டுள்ள வேளையில், அமித் ஷாவின் வருகை மிக முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.
அவர் வேலூரில் நடைபெற உள்ள ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் முதலில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார் என அறியப்படுகிறது.
குறிப்பாக, கூட்டணி விரிவாக்கம், மாநில கட்சிகளுடன் இணக்கப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேர்தல் களப்பணிகளின் துரிதப்படுத்தல் போன்ற விவகாரங்களில் அமித் ஷா நேரடியாக வழிகாட்டுவார் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, தமிழக பாஜக அமைப்பில் முக்கிய தலைவர்கள் தில்லியில் தொடர்ச்சியாக ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் டெல்லி செல்லும் திட்டத்துடன் இருக்கிறார்.
அதேபோல், முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அதற்கு முன்னர், ஓபிஎஸ் மற்றும் அமித் ஷா சந்திப்பும் நடைபெற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றது.
இந்தப் பின்னணியில், அமித் ஷாவின் தமிழகம் வருகை பாஜகக்கு தேர்தல் & கூட்டணி வியூக திட்டங்களில் புதிய நகர்வாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
English Summary
BJP ADMk Alliance Amit shah EPS OPS