விளம்பர பிரியர் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கு இதுக்கூட புரியாதா.. வெங்கடேசனுக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே எனக் கேட்டு வீடியோ வெளியிட்ட கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசனுக்கு பாஜக பிரமுகர் ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஜே பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமான மாற்ற ரூ.550 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் ஜேபி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், எய்ம்ஸ் கட்டுமான இடத்தைப் பார்வையிட்ட மதுரை கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே.? நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில் பபரபரப்பை ஏற்படுத்தி தற்போது விவாதமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் எம் பி சு.வெங்கடேசனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக பிரமுகர், எஸ்.ஜி சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், "மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் கூறியதைப் புரிந்துகொள்ளும் அறிவிற்குத் திறன் இல்லாத விளம்பர பிரியர் கம்யூனிஸ எம்.பி. அதற்குள் அவசரக் குடுக்கையாக இடத்தைப் பார்க்கக் கிளம்பிவிட்டார். ஐயா எழுத்தாளரே ஆர்வக்கோளாறுக்கு அளவு வேணும் காம்ரேட்!

பூர்வாங்க பணிகள் என்றால் அர்த்தம் தெரியுமா? தெரியவில்லை எனில் கேட்டு தெளிவு பெருக!" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Admin reply to MP S Venkatesh in AIMS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->