பிகார் தேர்தலில் கலக்கும் தி புளுரல்ஸ் பார்ட்டியின் புஷ்பம் பிரியா சவுத்ரி! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த முறை பெரும் கவனத்தை ஈர்த்திருப்பது “தி புளுரல்ஸ் பார்ட்டி”. முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் குமார் சவுத்ரியின் மகளான புஷ்பம் பிரியா சவுத்ரி நிறுவியுள்ள இந்தக் கட்சி, பீகார் அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

243 தொகுதிகளிலும் போட்டியிடும் இந்தக் கட்சி, அதில் பாதி இடங்களை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது. கட்சிக்கான தேர்தல் சின்னமாக ‘நகரம்’ வழங்கப்பட்டுள்ளது.

தர்பங்காவைச் சேர்ந்த புஷ்பம் பிரியா 1987 ஜூன் 13 ஆம் தேதி பிறந்தவர். புனேவில் பட்டப்படிப்பை முடித்த அவர், பின்னர் இங்கிலாந்தில் மேல்படிப்பு பயின்றார். சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டுப் படிப்பிலும், லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொது நிர்வாகத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு திரும்பிய பிறகு, பீகார் அரசின் சுற்றுலா மற்றும் சுகாதாரத் துறைகளில் ஆலோசகராக பணியாற்றிய அவர், பின்னர் அரசியலுக்குள் நுழைந்தார்.

தற்போது தர்பங்காவிலிருந்து போட்டியிடும் புஷ்பம் பிரியா, கருப்பு உடையும் மாஸ்க்கும் அணிந்து வலம் வருகிறார். இதுகுறித்து அவர், “என் கட்சியின் பெயர் பன்மையை பிரதிபலிக்கிறது. அனைத்து சாதி, மதங்களும் ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அரசியல்வாதிகள் ஏன் வெள்ளை அணிவார்கள் என தெரியாது; அதனால் நான் கருப்பு அணிகிறேன். தேர்தலில் வெற்றிபெறும் வரை மாஸ்க்கை அகற்றமாட்டேன்,” என தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Election 2025 MLA Daughter


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->