கருணாநிதிக்கு பாரத ரத்னா...! - திமுக எம்.பிகள் மக்களவையில் ஒற்றைக் குரல்...! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்களில் மக்களவை நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியிருந்தன.

பின்னர் அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடைபெற்றதைத் தொடர்ந்து, டிசம்பர் 3ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் செயல்பாடுகள் சீராக நடைபெறத் தொடங்கின.இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக, ‘வந்தே மாதரம்’ பாடல் வடிவெடுத்த 150ஆவது ஆண்டு நினைவையொட்டி, டிசம்பர் 8ஆம் தேதி மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க, பிரியங்கா காந்தி, தமிழ்நாடின் ஆ.ராசா, துரை வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்து பதிவு செய்தனர்.இதனைத் தொடர்ந்து, SIR தொடர்பான விரிவான விவாதம் டிசம்பர் 9ஆம் தேதி மக்களவையில் நடைபெற்றது. விவாதத்தை துவக்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளை சிதைக்கும் நோக்கில் தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதே விவாதங்கள் நேற்று மாநிலங்களவையிலும் நீண்ட நேரம் நடைபெற்றன.இந்தச் சூழலில், குளிர்காலக் கூட்டத்தொடரின் 9ஆம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த அமர்வில், திமுக எம்.பிக்கள் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என மக்களவையில் வலியுறுத்தினர்.

இதுகுறித்து திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உரையாற்றும்போது கூறியதாவது:திராவிடக் கொள்கையை நாட்டில் வலுப்படுத்திய சாம்பியன் கலைஞர்
பாதிக்கப்பட்டோர், ஏழை மக்களின் நிலையை உயர்த்துவதில் முன்னோடி
ஆட்சியில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருந்த தலைவர்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த 
அவர் போட்டியிட்ட அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வெற்றிபெற்ற அபூர்வ சாதனை.இதுவரை திமுகவின் யாருக்கும் பாரத ரத்னா வழங்கப்படாத நிலையில், கலைஞர் கருணாநிதி அந்த பெருமைக்குரியவர் என வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bharat Ratna Karunanidhi DMK MPs speak one voice Lok Sabha


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->