வாக்காளர் பட்டியல் திருத்தம்: தமிழகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவகாசம் நீட்டிப்பு..! - Seithipunal
Seithipunal


 தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கான அவகாசத்தை நீட்டித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. SIR படிவங்களை பூர்த்தி செய்து வரும் டிசம்பர் - 14 க்குள் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளவுள்ளது. அதன் முதற்கட்டமாக பீகாரில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் தமிழகம், கேரளா, வங்கதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தற்போது வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதற்கான தமிழகத்தில் விண்ணப்ப படிவத்தை, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதுடன், அதை பூர்த்தி செய்து திரும்ப பெற, வரும் 04-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள, 6.41 கோடி வாக்காளர்களில், 6.30 கோடி வாக்காளர்களுக்கு மேல், கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குறித்த திருந்தகளுக்கு அவகாசக் கேட்டு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை இன்று ( டிசம்பர் -11) வரை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது.

தற்போது, தமிழகம், குஜராத், மபி, சத்தீஸ்கர், உபி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் எஸ்ஐஆர் பணிகளை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க வரும் 14-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் விநியோகம் செய்யப்ப்டட எஸ்ஐஆர் படிவங்கள் 100 சதவீதம்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆறு கோடியே 51 லட்சத்து 13 ஆயிரத்து 221 விண்ணப்பப்படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The deadline for voter list revision has been extended in states including Tamil Nadu and Gujarat


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->