ஆரம்பமே அமர்களம்...இது விஜய்க்கான நேரம்...! - இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வின் ஆச்சரியப் பேச்சு...! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கிய சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இதன் பின்னணியில் மாநில அரசியல் சூழல் தீவிர கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று உற்சாகமான சூழலில் தொடங்கியது.முதல்நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.

எதிரணிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாததால், ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை மரபின்படி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து ஜே.சி.டி. பிரபாகரின் கரங்களை பற்றியபடி அவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர்.

அந்த நிகழ்வு அவையில் ஜனநாயக மரபுகளின் அடையாளமாக கவனம் பெற்றது.பின்னர் முதல்-அமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகருக்கு வாழ்த்துகளை தெரிவித்து உரையாற்றினர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் உரையாற்றியபோது தெரிவித்ததாவது,"முன்னாள் முதலமைச்சர் காமராஜரை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற அரசியல் நாகரிகத்தைப் போலவே, தற்போதைய முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அரசியல் இயக்கத் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு புதிய மரியாதையை சேர்த்துள்ளது.

திமுக தலைவர், மதிமுக பொதுச்செயலாளர், திராவிடர் கழக தலைவர், பாமக தலைவர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இடதுசாரி இயக்கத் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதன் மூலம் புதிய அரசியல் சகாப்தத்திற்கு அவர் தொடக்கமிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாடும் அரசியல் நாகரிகமும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை முதல்-அமைச்சர் விஜய் தனது செயல்பாடுகளால் உருவாக்கியுள்ளார்.

பொறுப்பேற்ற உடனேயே மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு, தனது ஆட்சியின் தொடக்கத்தையே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைத்துள்ளார்” என்று அவர் பாராட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

beginning disaster its time Vijay Communist Party India MLA surprise speech


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->