இலங்கையில் திடீர் திருப்பம்.. ராஜபக்சேவை தொடர்ந்து முக்கிய புள்ளி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இருந்தபோதிலும் இன்னும் அங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு எரிபொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனிடையே இலங்கையில் பொதுமக்கள் இரண்டு வேலை மட்டுமே சாப்பிடும் நிலை வரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவியை நாடி வருகிறோம். இதற்கு சில பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இது கிடைக்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

basil rajepaksa may be resign for mp post


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->