ஓட்டு எண்ணும் அறைக்குள் சீருடை அணிந்த அல்லது சீருடை அணியாத போலீசாரை அனுமதிக்க தடை..!
Ban on allowing uniformed or plainclothes police personnel inside the vote counting room
ஓட்டு எண்ணும் அறைக்குள் போலீசார் நுழைய தேர்தல் ஆணையம் தடை நடத்தும் அலுவலர் அழைப்பின்றி உள்ளே அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழகத்திற்கு கடந்த 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. அதன்படி நாளை மறுநாள் (மே 04 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளன.
மே 04 ஆம் தேதி காலை 08 மணிக்கு வாக்குகள் எண்ணும் நடவடிக்கை தொடங்கவுள்ளன. இருப்பினும் அன்றையதினம் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் காலை 05ல் மணிக்கே ஓட்டு எண்ணும் இடத்திற்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஓட்டு என்னும் அறைக்குள் பணிக்கு நியமித்த மேற்பார்வையாளர்கள், மைக்ரோ அப்சர்வர்கள் மற்றும் உதவியாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அத்துடன் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், தேர்தல் பணியில் தொடர்புடையவர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் அனுமதிக்க வேண்டும். அனால், சீருடை அணிந்த அல்லது சீருடை அணியாத போலீசாரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அழைத்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Ban on allowing uniformed or plainclothes police personnel inside the vote counting room