பௌர்ணமி மற்றும் ஹயக்ரீவர் ஜெயந்தியில் வரும் ஆவணி அவிட்டம் 2025: எவ்வாறு வழிப்பாடு செய்ய வேண்டும்..?
Avani Avitham 2025 on Pournami and Hayagrivar Jayanti
ஆவணி அவிட்டம் இந்தியாவில் பிராமணர்களால் மிக முக்கியமான வேத சடங்கு நாளாக கருதப்படுகிறது. இதை உபகர்மா என்றும் கூறுவார்கள். இந்த நாளில் பிராமணர்கள் பூணூல் மாற்றிக் கொள்வது மிக முக்கியமான சடங்காக கருதப்படுகிறது. இந்த நாளில் வேதங்களை கற்பித்தலை தொடங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி மற்றும் ஹயக்ரீவர் ஜெயந்தியுடன் இணைந்த நாளில் ஆவணி அவிட்டம் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
ஆகஸ்ட் 08-ஆம் தேதி பகல் 02.12 மணிக்கு தொடங்கிய ஆகஸ்ட் 09-ஆம் தேதி பகல் 01.25 மணிக்கு பெளர்ணமி திதி நிறைவடைகிறது. அன்று சூரிய உதய நேரமாக காலை 06.04 மணி. சூரிய அஸ்தமன நேரமாம் மாலை 06.59 மணி. இந்த நாள் வேத, சாஸ்திரங்களை தொடங்குவதற்குரிய நாளாக உள்ளது. பிரம்மாவிடம் இருந்து அசுரர்கள் திருடிய நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் இருந்து மீட்டுக் கொடுத்தவர் ஹயக்ரீவர்.
இந்த ஹயக்ரீவர், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவராக இல்லாத போதிலும் ஞானம், செல்வத்தை அருளும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரது அவதார திருநாளும் ஆவணி அவிட்டம் அன்று அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

ஆவணி அவிட்டம் நாளில் யஜூர் வேத பிராமணர்கள் யஜூர் வேதத்தை ஓதத் தொடங்குவார்கள். அடுத்த ஆறு மாதங்கள் வரை இந்த மந்திரத்தை ஓதுவதோடு, வேதங்களை கற்பதுடன், தர்மத்தின் பாதையில் நடக்க புதிய வழியை காட்டு திருநாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் பிராமணர்கள் ஒன்று கூடி காயத்ரி மந்திரத்தை லட்சம் முறை ஜபிப்பார்கள்.
ஆவணி அவிட்டம் அன்று அதிகாலையில் எழுந்து புனித நீராடி சந்தியாவந்தனம் மற்றும் காமோகர்ஷித ஜபம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும். அதாவது, கடந்த காலங்களில் வேத மந்திரங்களை பாராயணம் செய்யும் போது ஏதாவது தவறு செய்திருப்பதால் அதற்காக மன்னிப்பு கேட்பதற்காக இது செய்யப்படுகிறது.
பின்னர் பூணூல் மாற்றிக் கொண்டு, பெரியர்கள் அல்லது குருமார்கள் மூலமாக வேத மந்திரங்களை கற்க ஆரம்பிப்பார்கள். பிற்பகல் வரை இது நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பின்னர் பித்ரு தர்ப்பணம் செய்து, எள்ளும் தண்ணீரும் வழங்குவது கடமையாகும். அதன் பின்னர் 108 முறை காமோகர்ஷித மந்திரத்தை உச்சரித்து ஹோமம் நடத்தப்படும்.

இந்த ஆவணி அவிட்டம் தமிழ்நாடு மற்றுமன்றி கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய வழிபாடாகும். இந்தியாவின் பல பகுதிகளிலும் பல பெயர்களில் இந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. பிராமண சிறுவர்களுக்கு, உபாகர்மா எனப்படும் முதல் முறையாக பூணூல் அணிந்து, அவர்களின் ஆன்மிக பயணத்தை தொடங்கும் மிக முக்கிய சடங்காக இது அமைகிறது.
இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் நாளில் ஹயக்ரீவர் ஜெயந்தியும், பெளர்ணமியும் இணைந்து வருவதால் இந்த நாளில் ஹயக்ரீவர் வழிபாடும், அம்பிகை மற்றும் பெருமாளின் வழிபாடு சிறந்ததாகும். பெளர்ணமி என்பதால் குல தெய்வ வழிபாடு, முன்னோர்களையும் வழிபடுவது,சத்ய நாராயண பூஜை செய்து வழிபடுவது சிறப்பானதாகும்.
English Summary
Avani Avitham 2025 on Pournami and Hayagrivar Jayanti