பாஜக பெண் எம்பி மீது கற்களை வீசி  கொலை முயற்சி.. சாலையில் அமர்ந்து தர்ணா.! - Seithipunal
Seithipunal


ஹரியானாவில் நூக் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த சுரங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி லாரி ஏற்றி கொல்லப்பட்டார் .

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த காவல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் கட்டார் அறிவித்ததுடன், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது எனவும் கூறினார்.

இந்த நிலையில், ராஜஸ்தானில் சுரங்க மாபியா கும்பல் தனது கார் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தியதுடன், லாரி ஏற்றி கொல்ல முயற்சித்தது என பா.ஜ.க. பெண் எம்.பி. ரஞ்ஜீதா கோலி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், தனது புகார் மீது எந்தவித கவனமும் செலுத்தவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

வாகனம் ஏற்றி கொல்ல முயற்சித்தவர்கள் எம்.பி.யின் கார் மீது கற்களையும் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க. பெண் எம்.பி. மீது கடந்த மே மாதம் மற்றும் கடந்த வருடம் என கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attempt to kill BJP woman MP by throwing stones


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->