வையம் உள்ளவரை வள்ளுவர் புகழ் வாழும்: திருவள்ளுவர் தினத்தில் நயினார் நாகேந்திரன் புகழாரம்...!
As long as world exists Valluvar fame live on Nainar Nagendran pays tribute Thiruvalluvar Day
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தனது எக்ஸ் தளப் பதிவில்
“வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்”
என்று தொடங்கி, திருவள்ளுவரின் உலகளாவிய பெருமையை எடுத்துரைத்துள்ளார்.
அந்த பதிவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்ற நாடெங்கிலும் தமிழ் மொழியின் தொன்மை, அதன் பண்பாட்டு ஆழம் மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்தை பெருமையுடன் எடுத்துச் செல்கிறார் என்றும், தமிழ் மொழி பாரத தேசத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றாகும் என்பதை ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் உணர வேண்டுமென அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் இதுவரை எவரும் மேற்கொள்ளாத அளவிற்கு, தமிழ் மொழிக்காக பிரதமர் மோடி முன்னெடுத்து வரும் பணிகள் அளப்பரியவை என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.மேலும், “உலகப் பொதுமறை” என போற்றப்படும் திருக்குறளை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்ததோடு மட்டுமல்லாமல், வடமாநில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்திய பெருமையும் பிரதமருக்கே உரியது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிறந்த சான்றாக, பிரதமரின் சொந்த நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற “காசி தமிழ் சங்கமம்” நிகழ்வில், ஏராளமான வடமாநில மாணவர்கள் ஆர்வத்துடன் தமிழ் கற்றுக் கொண்ட காட்சிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழால் திருவள்ளுவருக்கு பெருமை, திருவள்ளுவராலும் தமிழாலும் தமிழருக்கு மட்டுமல்ல; உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை சேர்கிறது என்றும், திருவள்ளுவர் தினத்தில் அந்த மாமுனிவரின் புகழைப் போற்றி வணங்குவோம் என்றும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
As long as world exists Valluvar fame live on Nainar Nagendran pays tribute Thiruvalluvar Day