வாக்குச்சாவடிக்கு எடுத்துச்செல்ல Voter ID இல்லையா? இந்த 12 ஆவணங்களில் ஒன்று இருந்தால் எடுத்துச்செல்லலாம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், பல்வேறு காரணங்களால் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) கையில் இல்லாதவர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றத் தேர்தல் ஆணையம் 12 மாற்று ஆவணங்களை அங்கீகரித்துள்ளது.

அதன்படி, வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்றாகக் கொண்டுசெல்லவேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு;

ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், இந்தியர் கடவுச்சீட்டு, வங்கி / அஞ்சலகம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், தேசிய மக்கள்தொகை பதிவு திட்டத்தின் கீழ் ஆர்ஜிஐ வழங்கிய ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அட்டை  ஆகையவைகளை ஆவணங்களாக எடுத்து செல்லலாம்.

மேலும், ஓட்டுநர் உரிமம், தொழிலாளர் நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதாரக் காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய / மாநில அரசுகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் / சட்டப்பேரவை உறுப்பினர்கள்/ சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டை ஆகியவற்றினை ஆவணங்களாக எடுத்து செல்லலாம்.

வாக்காளர் பட்டியலில் (Voter List) பெயர் இடம்பெற்றிருந்தால் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் மேற்கூறிய 12 ஆவணங்கள் இருந்தால் போதும். தேர்தல் ஆணையத்தால்   விநியோகிக்கப்படும் 'பூத் ஸ்லிப்' என்பது ஒரு தகவல் மட்டுமே.  அது அடையாள ஆவணமாகக் கருதப்படாது.

எனவே, இந்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மறக்காமல் எடுத்துச் சென்று, ஜனநாயக உரிமையை நிலைநாட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

As an alternative to the Voter ID you may carry one of the 12 specified documents


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->