ஆம்ஸ்ட்ராங் படுகொலை: மருத்துவமனை முன்பு திரண்ட ஆதரவாளர்கள்.. ஸ்தம்பித்த சென்ட்ரல்..!! - Seithipunal
Seithipunal



பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு 7.30 மணி அளவில், மர்ம நபர்களால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். மாநிலத்தின் தலைநகரில் நடந்துள்ள இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

உணவு டெலிவெரி செய்பவர்கள் போல் வந்த 6 மர்ம நபர்கள் பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டு வாசலில் அவர் நின்று கொண்டிருந்த போது, அவரது கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் பயங்கரமாக வெட்டியுள்ளனர். மேலும் குற்றவாளிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி 8 பேர் இன்று காலை போலீசில் சரணடைந்துள்ளனர்.  இந்நிலையில் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை அருகே ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திடீரென திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோஷமிட்டு வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பான காலை வேளையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் போலீசார் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong Supporters Protest Near Chennai Rajiv Gandhi Hospital


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->