தமிழகத்திற்கு நான்கு  துணை முதலமைச்சர்! அசத்தல் திட்டத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் கட்சி!  - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகி நடிகர் ரஜினியிடம் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி தனி கட்சி, கொடி உள்ளிட்டவற்றை அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருந்த கட்சிக்கான பணிகள் உள்ளிட்ட‌ அனைத்தையும் செய்து வந்த அனுபவத்தில் மிக குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ளேன்.ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 6 மாவட்ட செயலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்களும் எங்களோடு கைகோத்துள்ளனர். எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம்" என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்து இருந்தார். 

சொன்னபடி அர்ஜுனமூர்த்தி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார். தனது கட்சியின் பெயருக்கு "இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி" என்று பெயர் வைத்த அவர், கட்சி கொடியில், நீலம், வெள்ளை, சிவப்பு நிறங்கள் இடம்பெற்றுள்ளது. கட்சியின் முக்கிய கொள்கையாக. "சத்தியம்-சமத்துவம்-சமர்ப்பணம்" என்று பெயரிட்டுள்ளார். 

இவரின் இந்த கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த், "இன்று தனி அரசியல் கட்சி துவங்கியிருக்கும் அர்ஜுனன் மூர்த்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்றும் தெரிவித்து இருந்தார். அவரது கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் எந்திரன் (ரோபோ) சின்னத்தை ஒதுக்கியுள்ளது.  

இந்நிலையில் தமிழத்திற்கு அதிகாரத்தை பரவலாக்குவோம் ஆட்சியை எளிமையாக்குவோம் என்ற கோஷத்துடன் தமிழகத்திற்கு நான்கு துணை முதலமைச்சர்கள் இருப்பார்கள் என அறிவித்துள்ளார் இமமுக கட்சியின் அர்ஜுனமூர்த்தி . அதன்படி, "1. மகளிரை அதிகாரப்படுத்த ஒரு பெண் துணை முதல்வர், 2. அறிவுசார் யுகத்தை எதிர்கொள்ள ஒரு துணை முதல்வர், 3. Dr .அம்பேத்கர் கனவு மெய்ப்பட ஒரு பட்டியலின துணை முதல்வர், 4. அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திற்கு ஒரு துணை முதல்வர்" ஆகிய பிரிவுகளின் கீழ் துணை முதலமைச்சரை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arjunamoorthy planned 4 Deputy chief minister to Tamilnadu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->