OG திட்டங்களா...Cheap Copyதா...? திமுக- அ.இ.அதிமுக மோதல் மக்கள் நலத்தில்...! - Seithipunal
Seithipunal


நான்கரை ஆண்டுகளாக அ.இ.அதிமுக அரசு மக்களுக்கு நலத் திட்டங்களை நிறைவேற்றும் போது, ஸ்டிக்கர்கள் ஒட்டுவதை மட்டும் வேலை எனக் கருதி, மக்களுக்கு நேரடி நன்மை வழங்கியதை இப்போது “காப்பி அடிக்கிறாங்க மிஸ்” என்று திமுக அமைச்சர்கள் குற்றம்சாட்டுவது சிரிப்பு மட்டுமே உண்டாக்குகிறது.
எது உண்மை, எது நகல்?
அம்மா மருந்தகம் – ஒரிஜினல், முதல்வர் மருந்தகம் – காப்பி!
அம்மா மினி கிளினிக் – ஒரிஜினல், மக்களை தேடி மருத்துவம் – காப்பி!
தாலிக்கு தங்கம் – ஒரிஜினல், அதைக் காப்பி செய்து புதுமைப் பெண் திட்டமாக காட்டியது திமுக!
இப்படி அடுக்கி பார்க்கையில், திமுக அரசு சொல்வது அனைத்தும் அ.இ.அதிமுக திட்டங்களின் Cheap Copy தான். மக்கள் நலத் திட்டங்களில் எப்போதும் அசல் உரிமையாளர் நாம்தான்.


ஒரு குடும்பம் கொள்ளையடிக்க மட்டுமே திட்டங்களை பயன்படுத்தும் திமுக கூட்டத்திற்கு இதெல்லாம் எப்படி தெரியும்? மகளிருக்கு நேரடியாக நன்மை சேர வேண்டும், அதுவும் நேரடி பணம் என்கிற நோக்கத்துடன் தான் அ.இ.அதிமுக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தின் அடுத்த பரிணாமமாக பொங்கல் பரிசு திட்டத்தை நிறைவேற்றியது. இதன் தொடர்ச்சி போல, 2021 தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் மகளிருக்கு ரூ. 1500/- அளிக்கும் திட்டத்தையும் அறிவித்தோம்.
மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி சாதனைகளுக்கு ரிப்பன் வெட்டிய “டூப்” முதல்வர் ஸ்டாலின் அரசு, வேறென்ன செய்தது?
திமுக அரசின் மாதம் ஆயிரம் ரூபாய், அண்ணன் #எடப்பாடியார் தொடர்ச்சியான வலியுறுத்தலுக்கு பிறகு 28 மாதத்திற்குப் பிறகு லேட்டா கொடுத்தது. அதையும் இன்று வரை, அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் வழங்குகிறதா?
அ.இ.அதிமுக தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றிப் பேசும் அமைச்சர்கள் யாரென்று பார்த்தால், ஒருவர் ஒட்டுண்ணி ரகுபதி. வாய்ப்பு வந்தால், தன்னுடைய வேட்டியை கழற்றி வேறு வேட்டிக்கு தாவும் ரகுபதி, தேர்தல் வாக்குறுதிகளைப் பற்றி பேசலாமா?
மற்றவர் டி.ஆர்.பி. ராஜா. சட்டமன்றத்தில் கம்பி கட்டும் கதைகளை உருட்டி, “ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அது தான் வளர்ச்சி” என்ற புரட்சித் தலைவரின் பாடலை நினைவூட்டுகிறார்.
எடப்பாடி பழனிசாமி ஒரு வாக்குறுதியை அளித்தால், அது நேரடியாக செயலில் அமையும் என்பதை மக்களுக்கு நன்றாக தெரியும். இதனால் தான் திமுக அரசு இவ்வளவு வயிற்றெச்சல் அடைகிறது.
நல்லா கதறுங்க அமைச்சர் சார்-களே… இன்னும் இரு மாதங்கள் மட்டுமே! Tic Toc, Tic Toc…


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are these original plans or cheap copies DMK AIADMK conflict over welfare people


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->