யாருன்னா பதில் சொல்லுங்கப்பா.. இந்துவுக்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..? சிவன், முருகன் ஹிந்துவா? சீமான் கேள்வி..?
Are Shiva and Murugan Hindu Seemans question
சென்னை விமான நிலையத்தில் வைத்து நாம் தமிழ் கட்சியின் ஒருங்கினாய்ப்பாளர் சீமானிடம், ஹிந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து, முருக பக்தர்கள் மாநாடு பற்றியும் நிருபர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர்களுக்கு பதிலளிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளதாவது:
ஆங்கில மொழி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்கு அவரின் கூட்டணியில் அ.தி.மு.க., உள்ளதால் இபிஎஸ் எதிர் கருத்து கூற முடியாது. ஆங்கிலத்தை புறம்தள்ள முயற்சிப்பது என்பது ஹிந்தியை முன்னிலைப்படுத்தத்தான் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் எந்த நாட்டிலும் ஆங்கிலம் இல்லை எனவும், பிரான்ஸ் என்றால் பிரெஞ்ச் என அவரவர் மொழியில் இருப்பர். தொடர்புக்கு கூட ஆங்கிலத்தை பயன்படுத்த மாட்டார்கள். நாம் அதை தொடர்பு மொழியாக, கெடுவாய்ப்பாய் இந்த ஆங்கில மொழி தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ., அவர்களின் தாய்மொழியை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பதோடு, மும்மொழியை ஏற்போம் என்றால் எம்மொழி எங்கே இருக்கிறது என்றும், மும்மொழியை ஏற்க முடியவில்லை, அதுதான் இங்கு பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய கோட்பாடு என்பது கொள்கை மொழி என்பது அவரவருக்கு அவரவர் தாய்மொழி தான் இருக்க வேண்டும் என்று சீமான் குறிப்பிட்டுள்ளதோடு, தொடர்பு மொழி அல்லது பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் என வைக்கலாம். ஆனால் அதையும் கொள்கை மொழியாக வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், பெற்றவள் ஒருத்தியாகத்தான் இருக்க முடியாது. எனக்கு பெற்றவள் தமிழ். உனக்கு தெலுங்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, இந்தியை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த முயற்சியில் இந்த நாடு எவ்வளவு பின்னடைவை சந்திக்க போகிறது..? தேச ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கு எவ்வளவு இடையூறு வரப்போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம் என்று விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும், வள்ளுவர் கோட்டம் இருக்கிறது, சிலை இருக்கிறது. ஆனால் குறள் படிக்க ஒரு கூடம் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், குறள் படித்து அதன் வழி நடக்க இன்றைக்கு ஒரு வாய்ப்பு இருக்கா..? வள்ளுவர் தந்த வாழ்வியல் நெறிமுறை உலகத்தில் வேறு எங்காவது இருக்கா..? என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் படிக்கவே வாய்ப்பில்லாத ஒரு சூழலை உருவாக்கி விட்டு, அரசு பள்ளியில் தான் இருந்தது, அனால், இப்போது அதையும் ஆங்கில வழியாக மாற்றிவிட்டீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
சீமான் நிருபர்களிடம் மேலும் பதிலளிக்கையில், முதலில் ஹிந்துக்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது..? முருகன் ஹிந்துவா..? நான் கேட்பதற்கு யாராவது பதில் சொல்லுங்க..? சிவன் ஹிந்துவா..? சிவன், முருகன் ஹிந்துவா..? யாரவது சொல்லுங்க என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், அரசியலில் என்ன செய்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. எனவே எங்களின் இறையை எடுத்து வள்ளுவனுக்கு காவியை போட்டு பார்த்தீர்கள்... அது எடுபடவில்லை. இப்போது வேலை தூக்கி பார்க்கிறீர்கள். என்று விமர்ச்சித்துள்ளார்.
மேலும், ஹிந்து மாநாடு போடுறீங்க..? எத்தனை மாநாடு போட்டாலும் நீங்க எடப்பாடி பின்னாடி தான் போய் நிக்கணும். பழனிசாமியே சொல்கிறார் .. நானே ஒரு முருக பக்தன், என் பேரே பழனிசாமி என்று. முருகனை கும்பிட்டு அந்த பழனிசாமி பின்னாடி தான் போய் நிக்கணும்..? என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Are Shiva and Murugan Hindu Seemans question