உயிர்காக்கும் கருவிகள் தரமாக இல்லையா...? ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை மரணத்திற்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் உயிரைக் காக்க உதவும் உயர்தர மருத்துவக் கருவிகள் போதிய அளவில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை, நோயைக் கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவும் மருத்துவக் கருவிகள் இல்லாத காரணத்தால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் செய்தி மிகுந்த மனவேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் இத்தகைய துயரச் சம்பவங்கள் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.பச்சிளம் குழந்தைகள் மற்றும் பிற நோயாளிகளின் உயிரைக் காக்கத் தேவையான மருத்துவக் கருவிகளை வாங்குவதற்கும், அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு நிதியைச் செலவிடுவதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று முதல்-அமைச்சரிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகக் குழந்தைகளின் தாய்மாமன் என்று விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசு, உயிர்காக்கும் மருத்துவ வசதிகள் இல்லாததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்தியைக் கண்டு ஏன் கவலைப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த உலகைப் பார்க்கத் தொடங்குவதற்கு முன்பே உயிரிழந்த அந்தக் குழந்தையின் குடும்பத்தினருக்கு அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என்றும் வினவியுள்ளார்.

தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தைப் பின்னர் செயல்படுத்திக் கொள்ளலாம். அதற்கு முன்பாக, உயிர்களைக் காப்பாற்றத் தேவையான தரமான மருத்துவக் கருவிகள் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are life saving equipment not up to standard Vanathi Srinivasan strongly condemns death infant at Ramanathapuram Government Hospital


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->