சென்னை சூப்பர் 06; திராவிட மாடல் அரசின் புதிய 06 திட்டங்கள் அறிவுப்பு..!
Announcement of 6 New Schemes by the Dravidian Model Government under the Title Chennai Super 06
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டார்.
மொத்தம் 50 தலைப்புகளின் கீழ் 525 வாக்குறுதிகளை அன்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். குறிப்பாக, காலை உணவு திட்டம் 08-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம், மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000லிருந்து ரூ.2,000ஆக உயர்வு, விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள், 10 லட்சம் புதிய வீடுகள், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களில் இனி மாதந்தோறும் ரூ.2ஆயிரம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் வரை பிணை ஏதுமின்றி மானியத்துடன் கடன், 35 லட்சம் உயர்கல்வி மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தன.
அதிலும் முக்கியமாக இல்லத்தரசிகளுக்கு டிவி, ஃப்ரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மிஷின், மிக்சி, மைக்ரோவேவ் அவன், மின் அடுப்புகள் உள்ளிட்டவற்றை புதிதாக வாங்கவும், அல்லது ஏற்கனவே பயன்படுத்திவரும் பொருட்களை மாற்றவும் இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000 கூப்பன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மு.க. ஸ்டாலின், இன்று ‘சென்னை சூப்பர் 06’ எனும் தலைப்பில் ஆறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், மேம்படுத்தப்பட்ட பொது வசதிகள், சென்னை முழுவதும் சிறப்பான போக்குவரத்து, திட்டமிட்ட கால அளவில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமானம், அறிவியல் முறையில் கைவிடப்பட்ட நாய்களின் பிரச்சனைக்குத் தீர்வு, உலகளாவிய சிறப்பு மையம் மற்றும் உலகளாவிய திறமைத் தளம் (Global Talent Gateway) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
English Summary
Announcement of 6 New Schemes by the Dravidian Model Government under the Title Chennai Super 06