சாராயம் விற்று, தாலி அறுக்கும் அமைச்சர், செய்தி ஊடகத்தை மிரட்டுவதா? வெளுத்து வாங்கிய அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில், "சாராய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நான் சொல்லிக்கொள்வது இதுதான்.

சாராயம் விற்று பிழைப்பு நடத்துகிற உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரம் இருந்தால், மாத சம்பளம் வாங்கி, ஒரு இருசக்கர வாகனத்தில் சென்று, உச்சி வெயிலில் நின்று, நேர்மையாக செய்தி சேகரிக்க கூடிய பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்.

சாராயத்தை விற்று கமிஷன் நடத்தக்கூடிய ஒரு அமைச்சர் ஒரு செய்தி நிறுவனத்தை மிரட்டுவது ஏற்று கொள்ள முடியாது, சாராயம் விற்று பலரின் தாலியை அறுத்த ஒரு அமைச்சர், இதே டாஸ்மாக் வருமானம் பற்றி திமுக குடும்ப செய்தி தொலைக்காட்சி போட்ட செய்திக்கு கேட்கவில்லை.  

பத்திரிக்கையாளர் மீது கேஸ் போடுவதற்கு பதிலாக எங்கள் மீது போடுங்கள். அதே விஷயத்தை நாங்கள் சொல்கிறோம். நீங்கள் சாராயத்தை விற்க வேண்டும் என்று கவனம் கொடுத்ததால் தான், கோவையில் தற்கொலைப்படை தாக்குதல் தகவலை கோட்டை விட்டீர்கள். இது தான் உண்மை.

தீபாவளிக்கு முன்பு எவ்வளவு வெற்றி எவ்வளவு விற்பனை செய்வீர்கள், எத்தனை கடை திறந்து இருக்கும் என்று தமிழகம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எத்தனை முறை கூட்டம் நடத்தி இருப்பார். 

சாராய விற்பனைக்காக இவ்வளவு கூட்டத்தை போட்ட முதலமைச்சர், சட்டம் ஒழுங்குக்காக ஒரு கூட்டத்தை போட்டு உள்ளீர்களா? என்ஐஏ அதிகாரிகளுடன் பேசியுள்ளீர்களா? என்ன உதவி வேண்டும் என்று கேட்டீர்களா? எதுவும் செய்யவில்லை. எனவே முதலமைச்சர் அவர்கள் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு கண்ணாடி முன்பு நின்று, உண்மையாளுமே உள்துறையை நிர்வாகிக்க கூடிய திறமை அவருக்கு இருக்கா என்பதை அவரே பதிலளிக்க வேண்டும். பத்திரிகையாளர்களும் மற்ற விவரங்களை கேள்வியாக கேட்க வேண்டும்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamali reply to senthil balaji kovai issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->