ரீ-என்ட்ரி கொடுக்கும் அண்ணாமலை! அமித்ஷா கொடுத்த சிக்னல்.. அதிமுக–பாஜக கூட்டணியில் மீண்டும் பரபரப்பு! பதட்டத்தில் நயினார்! - Seithipunal
Seithipunal


அதிமுக–பாஜக கூட்டணியில் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது. கடந்த வாரம் ஓ. பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததும் அதிமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதே நேரத்தில் அண்ணாமலையும் டெல்லியில் இருந்ததாக தகவல் வெளியாகி, பின்னர் கோவையில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த காட்சி தமிழக அரசியலையே கொதிக்க வைத்துள்ளது.

ஓபிஎஸ், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியது அனைவரும் அறிந்ததே. எதிர்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பிய அவர், தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது தவெகவை நாடுவாரா என்ற யூகங்கள் தொடர்ந்து எழுந்தன. ஆனால் தற்போது அமித்ஷா அழைப்பில் டெல்லி சென்றது, அவர் மீண்டும் என்.டி.ஏ-வில் இணையலாம் என்ற சிக்னலாக பார்க்கப்படுகிறது.

இதற்கு மத்தியில் அண்ணாமலையின் நிலைமைவும் ஆர்வத்தைக் கிளப்புகிறது. மாநில தலைவர் பதவி விலகிய பிறகு அவர் எந்தப் பொறுப்பும் ஏற்காத நிலை இருந்தாலும், வரவிருக்கும் தேர்தலில் மத்திய பாஜக அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. அண்ணாமலையை தேசிய அரசியலுக்கே உயர்த்தலாம் என்ற சாத்தியக்கூறுகளும் பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கோவை திருமண விழாவில் ஓபிஎஸ்–அண்ணாமலை திடீர் சந்திப்பு புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது. இருவரும் சில நிமிடங்கள் பேசியது, பாஜக பெரிய திட்டத்தின் ஒரு பகுதியா என்று அரசியல் வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

அமித்ஷா தீவிரமாக முயற்சி செய்து வருகின்ற திட்டமானது, அதிமுகவின் அனைத்து பிரிவுகளையும் ஒன்றிணைத்து, 2026 தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதே என்கிறார்கள். அதில் ஓபிஎஸ் மீண்டும் இணைப்பும், அண்ணாமலையின் ரீ-என்ட்ரியும் முக்கிய கட்டங்களாக இருக்கலாம்.

எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஓபிஎஸ்–அமித்ஷா சந்திப்பில் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அதிமுக–பாஜக இடையேயான உறவில் புதிய பதட்டம் உருவாகியுள்ளது.

அடுத்த சில வாரங்களில் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் நடக்கலாம் என்பதற்கான ஆரம்பக் கண்களாகவே இந்த சந்திப்புகள் பார்க்கப்படுகின்றன. 2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மிக பெரிய திருப்பங்களை சந்திக்கத் தயாராக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai to make re entry Amit Shah signal AIADMK BJP alliance in turmoil again He collapsed in anxiety


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->