மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? மாநில அரசியலில் முருகன்! ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு!
Annamalai to become a Union Minister Murugan in state politics Annamalai to take root Expectations are rising
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி தொகுதி தேசிய அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இந்த முறை நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பதுதான்.
அவிநாசியில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் முருகன், எம்.எல்.ஏ. ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். இதன் தொடர்ச்சியாக அவர் வகித்து வரும் மத்திய அமைச்சர் பதவியும் காலியாகும்.
இந்தச் சூழ்நிலையில்தான், பாஜக மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்குத் திரும்ப அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசு எழுந்துள்ளது. முருகன் காலி செய்யக்கூடிய ‘தமிழ்நாடு கோட்டா’ ராஜ்யசபா இடத்தைப் பெற்று, அதன்மூலம் மத்திய அமைச்சரவைக்குள் நுழையலாம் என்பதே அண்ணாமலையின் திட்டமாகக் கூறப்படுகிறது.
இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத அண்ணாமலை, மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது வெறும் தேர்தல் வேலை அல்ல, எதிர்கால அரசியல் நகர்வுக்கான முன்னேற்பாடாக பார்க்கப்படுகிறது.
அண்ணாமலை ஆதரவாளர்கள், “அவர் எடுக்கும் முடிவு சாதாரணமில்லை; டெல்லி அரசியலில் அடுத்த கட்டம் உறுதி” என்ற நம்பிக்கையுடன் பேசுகின்றனர். அதே நேரத்தில், இது முழுவதும் அரசியல் கணிப்புகளும், உள்நிலை பேச்சுகளும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முருகன் அவிநாசியில் வெற்றி பெறுகிறாரா? அந்த வெற்றியால் டெல்லியில் புதிய அரசியல் சமன்பாடு உருவாகிறதா? அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் வாய்ப்பு கிடைக்கிறதா? என்ற கேள்விகளுக்கான பதில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெளிவாகும்.
English Summary
Annamalai to become a Union Minister Murugan in state politics Annamalai to take root Expectations are rising