விசிக 'போக்ஸோ' குற்றவாளி மணிமாறன் ஆடியோ விவகாரம் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
annamalai say about vck manimaran audio
தனித் தமிழ்நாடு கேட்டு, பிரிவினை வாதம் பேசிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேகாலயாவில் பணிபுரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், "தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளன், தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் நின்று வெற்றிபெற முடியுமா? உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்த ஆட்சியாளர்களின் தவறு இது" என்று அந்த வீடியோவில் ராணுவ வீரர் பேசியிருந்தார்.

வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை, லத்தூர் விசிக ஒன்றியச் செயலாளராக இருக்கும் மணிமாறன், 'நீ டெல்லியில தான இருக்க. உன் குடும்பம் இங்க எப்படி உயிரோட இருக்கிறது என்று பார்க்கிறேன்' என்று கொலை மிரட்டல் விடுத்தும், ஆபாச வார்த்தைகளால் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "தமிழகத்தில் பெயரளவுக்கு இருக்கக்கூடிய சில அரசியல் கட்சிகள், தேச விரோத செயல்களில் ஈடுபடுவதிலேயே பாதி நேரம் சென்று கொண்டிருக்கிறது.
மேகாலயா வடகிழக்கு பகுதியில் பணிபுரியக்கூடிய ஒரு இந்திய ராணுவ வீரரை, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர், 'நீ அங்கு தானே இருக்கிறாய். உன் குடும்பம் இங்கு தானே இருக்கிறது. நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று சொல்கிறார்.
தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் தேச விரோதமாக பல விஷயங்களை பேசுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முதல் முதலாக ஒரு ராணுவ வீரரை மிரட்டி, பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய அவரை அச்சுறுத்தி பேசுகிற அளவுக்கு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.

நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் தான் இருக்கிறோம். நம்மை எதுவும் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் தான் இதற்கு காரணம். அதனால் தான் அந்த இராணுவ வீரருக்கு உடனடியாக தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறேன்.
ராணுவ வீரருக்கு மிரட்டல் விடுத்த அந்தக் கட்சிக்காரர்களுக்கு அதனை செயல்படுத்தும் அளவுக்கு தைரியம் கிடையாது இருந்தாலும், 'நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னுடைய தனிப்பட்ட செல்போன் எனக்கு அழையுங்கள். ராணுவ வீரரான உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய பாரதிய ஜனதா கட்சி கடமைப்பட்டு இருக்கிறது' என்று அந்த இராணுவ வீரரிடம் கூறினேன்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.
(குறிப்பு : கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி மணிமாறன் கடந்த ஆகஸ்ட் மாதம் செங்கல்பட்டு, புதுப்பட்டினம் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்தபோது, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலையாகி வெளியே வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது)
English Summary
annamalai say about vck manimaran audio