அதிமுக கூட்டணி! அமித் ஷாவுடன் சந்திப்பு! அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக.,வுடனான கூட்டணி விவகாரம், சொந்த உள்கட்சி விவகாரம் தொடர்பாக டெல்லி சென்று மூத்த தலைவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டபின், சென்னை திரும்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்தாவது, "தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதே என் நோக்கம். ஆளும் கட்சியாக பாஜக வளர வேண்டும். 

தமிழகத்தில் பாஜக மூத்த தலைவர்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட்ட கருத்து மோதலும் கிடையாது. பாஜக வேகமாக வளர வேண்டும் என்று, நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றோம். 

கூட்டணி கட்சிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. நாங்கள் எங்கள் கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருகிறது.

இது வழக்கமான ஒன்றுதான். அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைமைக்கே உள்ளது" என்று அன்னமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Say About ADMK Alliance Delhi meet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->