பொறுக்கி கூட இப்படி பேச மாட்டான்.! ஆர்.எஸ் பாரதியை வெளுத்து வாங்கிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில்லை. அவர்களின் கவனம் சிதறிப் போய் உள்ளது. 

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனாக இருக்கும் ஆளுநரை திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருகிறார். ஒரு சமுதாயத்தை ஆர்.எஸ் பாரதி பேசியதை விட வேறு யாரும் கேவலமாக பேச முடியாது. 

கடந்த 30 ஆண்டுகளாக அவர் இப்படித்தான் பேசி வருகிறார். ரோட்டில் போகும் பொறுக்கி கூட இந்த மாதிரி பேச மாட்டான். திமுகவின் சொத்தை ஆபாசமாக பேசுவது தான். 

அவருடைய பேச்சுக்கு காவல்துறையினர் சப்பை கட்டு கட்டாமல் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாகலாந்து மக்கள் புகார் அளித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகாலாந்து போலீசார் வந்து ஆர்.எஸ் பாரதியை கைது செய்வதற்கு முன்பு தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தால் நல்லது. இல்லையென்றால் நாகாலாந்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said RSBharthi is confirmed to be arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->