வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட No சொன்ன முன்னாள் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
Annamalai said no contesting upcoming assembly elections
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் சுற்றுப்பயணத்தை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில்,பா.ஜ.க. மாநில தலைவர் ''நயினார் நாகேந்திரன்'' கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பத்தை கேட்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்த விருப்பப்பட்டியலை தயாரித்து மேலிடத்திற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும், பா.ஜ.க. முன்னாள் தலைவர் 'அண்ணாமலை' அவர்களை தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரன் உரையாடியுள்ளார். அப்போது, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று அண்ணாமலை தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமின்றி,தமிழிசை, சரத்குமார் போன்றோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.இதில், விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட 'சரத்குமார்' விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், சென்னையிலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட 'தமிழிசை' விருப்பம் சொன்னதாக தெரிவிக்கின்றனர்.
English Summary
Annamalai said no contesting upcoming assembly elections