இவர்கள் வெற்றி பெற "அதிமுகவில்" மாற்றம் வரும்.. - அண்ணாமலை தடாலடி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேரில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக திமுக பாஜக தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்காக தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஒரு நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த பேட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு மதுரையில் இரந்து கீழே தென்பகுதி வரை எந்த பக்கம் செல்வார்கள். ஓபிஎஸ் பக்கம் தான் செல்வார்கள். டிடிவி தினகரன் தேனி தொகுதியில் 50 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறப் போகிறார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓபிஎஸ் 15 நாட்களில் பலாப்பழ சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறப் போகிறார். இவர்கள் வெற்றி பெற்றதும் அதிமுகவில் மாற்றம் வரும் என அண்ணாமலை தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said if ops win changes will be coming in aiadmk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->