தேர்தல் அரசியல் இருக்கட்டும்.. உதயநிதி குரூப்-4ல் தேர்ச்சி பெறுவாரா.? ரவுண்டு கட்டிய அண்ணாமலை.!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வு ரத்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பாக இன்று தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

அந்த போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் "ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு அவருக்கு? நீட் வெற்றி பெற்ற மாணவனின் தந்தை அம்மாசியப்பன் நீட் தேர்வு வேண்டாம் என்று ஆளுநரிடம் குரல் கொடுக்கிறார். அதற்கு திமிராக நெவர், எவர் என பதில் கூறுகிறார். நான் ஆளுநரிடம் கேட்கிறேன் Who Are You. நீங்கள் மக்கள் பிரதிநிதியா? நீங்கள் ஒரு போஸ்ட்மேன் மட்டும்தான். முதல்வர் சொல்வதை ஒன்றிய அரசிடம் சொல்வது மட்டும்தான் உங்கள் வேலை.

ஆளுநர் ரவி அல்ல அவர் ஆர்.எஸ்.எஸ் ரவி. நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் நீங்களே முடிவு செய்கிற ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடுங்கள். திமுகவின் தொண்டனை உங்களால் ஜெயிக்க முடியுமா? உங்களின் சித்தாத்தங்களை மக்களிடம் சொல்லுங்கள். ஜெயித்துவிட்டு வாருங்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கேட்கிறோம்" என சவால் விடுத்திருந்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இத்தகைய பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது "ஆளுநரின் பதவி என்பது அரசியலை சார்ந்தது அல்ல. தேர்தலில் நிற்காத ஒரு பதவி. அவரிடம் போய் விதண்டாவாதத்திற்காக முதிர்ச்சி இல்லாமல், பொது அறிவு இல்லாமல் அரசு பதவியில் இருக்கும் பொறுப்புள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வா போட்டி போடலாம் என கூறுகிறார்.

இதற்கு ஆளுநர் பதிலடியாக அமைச்சர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துவிட்டு போட்டித் தேர்வு எழுத தயாராக என கேட்டால் யாருக்கு அசிங்கம். உதயநிதி ஸ்டாலின் சாதாரண டிஎன்பிஎஸ்சி அல்லது சிவில் சர்வீஸ் தேர்வு, இல்லையென்றால் குரூப்-4 தேர்விலாவது தேர்ச்சி பெற்று விட்டு பேசட்டும். ஆளுநரின் பொறுப்பு என்னவென்று புரிந்து கொள்ளாமல் பேசுகிறார். நீட் தேர்வு மசோதா முடிவு என்பது குடியரசு தலைவரின் கையில் உள்ளது. குடியரசுத் தலைவர் நீட் மசோதாவை நிராகரித்து விட்டால் அவரையும் தமிழகத்தில் வந்து தேர்தலில் போட்டி போட சொல்வார்களா? 

உதயநிதி ஸ்டாலினின் திமுகவில் இருக்கும் மூத்தவர்களை கேட்டு அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் அதுதான் அவருடைய ரகசியம். கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களிம் எவ்வாறு பேச வேண்டும் என உதயநிதி கற்றுக் கொள்ள வேண்டும். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்று உதயநிதி ஸ்டாலின் பேச ஆரம்பித்தால் அது அசிங்கம்" என அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai response udhayanithi comments on Governor Ravi


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->