ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு திரும்பப் பெற வேண்டும்..தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை!! - Seithipunal
Seithipunal


ஸ்டிக்கர் ஒட்டுவதில் கட்டுப்பாடு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சங்கர் ஜீவாலுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடித்ததில் கூறிவுள்ளதாவது,

உயர்திரு.சங்கர் ஜிவால் IPS அவர்கள்,

27-04-2024 தேதியில் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத வாகன தகடுகளை ஒட்டுவதில் கட்டுப்பாடு என்ற பெயரில் சென்னை பெருநகர காவல் துறை ஒரு கட்டுப்பாட்டு விதியை விதித்துள்ளது. இதில் சென்னை பெருநகரில் தனியார் வாகனங்களில் வாகன எண் தகட்டில் மற்றும் வேறு பகுதிகளிலும் பத்திரிகை, தலைமைச் செயலகம், டி என் இ பி, ஜிசிசி, காவல்துறை, அரசியல் கட்சிகள், மருத்துவத்துறை, வழக்கறிஞர் மற்றும் முப்படை போன்ற தொடர்புடைய ஸ்டிக்கர்கள் மற்றும் அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள் எழுத்துக்களை பொறிக்கக் கூடாது.

இவ்வாறு வெளியிடுவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது. கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் காவல்துறையின் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

வருகின்ற மே 1 ம் தேதிக்குள் மேற்கண்டவற்றை நீக்கிவிட வேண்டும். இந்த விதியை மீறினால் MV சட்டம் 1986 இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் பிரிவு 198 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் மற்றும் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177 இன் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகிறது. இந்த விதி குறிப்பாக பத்திரிகை துறையை குறி வைப்பதாக இருக்கிறது. முதல் வார்த்தை என்பது பத்திரிகை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது” என்று கூறுவதற்கு போதிய விளக்கம் தரப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களும் இதை தவறாக பயன்படுத்தி காவல்துறையின் கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்பி வருகிறார்கள் என்று கூறுவது காவல்துறையின் பலகீனத்தை வெளிப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல குறிப்பிட்ட துறையோடு சம்பந்தமில்லாமல் அந்த துறை குறித்த ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டறிந்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் சரியானது.

ஆனால் இதை விட்டுவிட்டு அந்தத் துறையோடு சம்பந்தப்பட்டவர்களும் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக கூறுவது ஏற்புடையதல்ல. இது காவல்துறை தங்களின் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு பணியாற்றும் துறையோடு சம்பந்தப்பட்டவர்களையும் குறி வைப்பதை காட்டுகிறது.
எனவே காவல்துறையின் இந்தக் கட்டுப்பாட்டு விதி உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது உரிய முறையில் திருத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது என்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Take back control over stickering Tamil Nadu Journalists Defense Federation demand


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->