அர்ஜுன் தாஸ் நடித்த ''ரசவாதி'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ரசவாதி''. இந்த திரைப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன்,ஜி,எம், சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ''ரசவாதி'' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், கார்த்தி, கார்த்திக் சுப்பராஜ், துல்கர் சல்மான், எஸ்.ஆர். பிரபு ஆகியோர் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட உள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjundas movie update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->