அண்ணாமலையின் இந்தி அங்கேயும் புரியவில்லை... இங்கேயும் புரியவில்லை...! - அமைச்சர் ரகுபதி தாக்கு - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்."சீமான் எதை எடுத்தாலும் பொங்கல் வைப்பார். தமிழ்நாடு திராவிட அடையாளத்தோடு இணைந்த மண்.

அதனால்தான் இங்கே திராவிட பொங்கல் கொண்டாடப்படுகிறது.மகாராஷ்டிராவில் சிக்கல் வந்தால் அண்ணாமலை உடனே ‘தமிழர்களுக்கு தாக்குதல்’ என்ற கதையை உருவாக்குவார்.

அவர் பேசும் இந்தி அங்கேயும் புரியவில்லை, இங்கேயும் புரியவில்லை” என்று சாடினார்.மேலும் அவர்,“எங்களை யாராலும் நெருக்க முடியாது. தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் பலவீனமடைகிறது.

அதை பலப்படுத்தும் சக்தி அவர்களுக்கு இல்லை” என்றார்.எடப்பாடி பழனிசாமியின் கூட்டணி பேச்சு குறித்து,“புதிய கட்சிகள் வரும் என்கிறார்கள். இப்போது லெட்டர் பேட் கட்சிகள் கூட உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக விவகாரங்களில் நடிகர் விஜய் மௌனம் காப்பது, அவரது அரசியல் தைரியத்தை காட்டுகிறது” என்று விமர்சனம் செய்தார்.

இந்தி திணிப்பு குறித்து பேசும்போது,“1965-ல் மாணவர்கள் துணிந்து எழுந்த போராட்டம்தான் இன்று வரலாறு. அன்றைய காங்கிரஸ் வேறு, இன்றைய காங்கிரஸ் வேறு” என்றார்.மேலும்,“காங்கிரஸ் – திமுக இடையிலான கருத்து வேறுபாடுகள் கூட்டணியை பாதிக்காது.

அது அவரவர் கருத்து மட்டுமே” என்று விளக்கம் அளித்தார்.மத்திய அரசு நிதி குறித்து,“பா.ஜ.க. ஆட்சியில் மத்திய வருமானம் உயர்ந்தாலும் தமிழ்நாட்டுக்கு கிடைப்பது சொற்பமே.

சாலை, கத்திப்பாரா மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் யுபிஏ ஆட்சியில்தான் கிடைத்தன” என்றார்.இறுதியாக,“அமித்ஷா, மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அரசியல் மாற்றம் ஏற்படாது. ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சும்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai Hindi not understood there nor understood here Minister Ragupathi attacks


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->