மடப்புரம் கோவில் காவலாளி உயிரிழந்த வழக்கு: தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட சம்வபம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றியுள்ளது.

இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு மாற்றியுள்ளதாக தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

'திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.

அதை வரவேற்கும் நேரத்தில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிக்காக காத்திருந்த போது, தி.மு.க., நிர்வாகியான ஞானசேகரனுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதில் இதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் காட்டப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் மாற்றியதை எதிர்த்து இதே தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.தற்போது என்ன மாறிவிட்டது. தேர்தல் நெருங்குவதால், பாரபட்சமற்ற விசாரணை என்ற எண்ணம் தி.மு.க..,வுக்கு தோன்றுகிறது.' என்று அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai alleges that the CBI has delayed the investigation into the death of a Madapuram temple guard considering the election


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->