தமிழக மீனவர்களை மீட்பதில் மாற்றுக் கருத்து?... முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் பங்கேற்க  முதலமைச்சர் விமானம் மூலம் நேற்று  இரவு மதுரை வந்தடைந்தார். அப்போது அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையையொட்டி மதுரை மாநகர், மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று டிரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் முழுஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதினார். தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கார் கார் மூலம் பசும்பொன் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் தேவர் சிலை மற்றும் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், டெல்லி செல்லும் போது மற்றும் கடிதங்கள் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கோரி மத்திய அரசை வலியுறுத்தி வருவதாகவும், தமிழக மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An alternative view on rescuing tamil nadu fishermen chief minister mk stalin sensational interview


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->