அரசு அதிகாரியைக் காரை ஏற்றி கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் - டிடிவி தினகரன் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் உதவி தொழில் ஆய்வாளர் திரு. சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் திரு சீனிவாசன் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

எளிதில் பேசி தீர்க்க வேண்டிய வாகன நிறுத்தம் தொடர்பான சிறிய வாக்குவாதத்தை, வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கி, ஆளுங்கட்சி நிர்வாகியின் மகன் என்ற அதிகாரப்போக்கில் அரசு அதிகாரி என்றும் பாராமல் திரு.சிவமூர்த்தி அவர்கள் மீது காரை ஏற்றி கொலை செய்திருப்பது தமிழகத்தில் ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

திரு.சிவமூர்த்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாகப் புகார் அளித்த பின்பும், திமுக நிர்வாகியின் மகன் என்பதால் வழக்குப்பதிவு செய்யாமலும், விசாரணையைத் தீவிரப்படுத்தாமலும் மெத்தனப் போக்குடன் செயல்பட்ட காவல்துறையின் செயல்பாடுகளும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, உதவி தொழில் ஆய்வாளர் திரு.சிவமூர்த்தி அவர்களைக் கொலை செய்த திமுக நிர்வாகியின் மகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் இதே நேரத்தில், ஆளுங்கட்சி எனும் பெயரில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் திமுகவினருக்கு வரும் சட்டமன்றத் தேர்தல் தகுந்த பாடமாக அமையும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ammk ttv dhinakaran condemn to dmk mk stalin govt


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->