கூட்டணிக் கட்சிகளே ஒன்று திரண்டு போராடும் அளவிற்கு அவலமிக்க ஆட்சி திராவிட மாடல் ஆட்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை நாளை திறக்கப்பட உள்ள நிலையில், அம்மருத்துவமனையில் பணியாற்ற போதுமான மருத்துவர்களும், அடிப்படை வசதிகளும் இல்லை எனக்கூறி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனைக்கு அடிப்படைத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் போதுமான அளவு நியமிக்கப்படாத அரசு மருத்துவமனையை அவசரகதியில் திறக்கும் திமுக அரசின்  முடிவுக்கு  எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு நடத்தியிருக்கும் இந்த போராட்டம் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஏற்கனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் அவலம் என ஒட்டுமொத்த சுகாதாரத்துறையும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், எந்தவித அடிப்படை வசதியுமில்லாத  மருத்துவமனைகளைத் திறந்து பொதுமக்களின் உயிரோடு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, நாளை நடைபெறவிருக்கும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கான திறப்பு விழாவை உடனடியாக ஒத்திவைப்பதோடு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த பின்பு அதனைத் திறக்க முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK TTV Dhinakaran Condemn to DMK MK Stalin Govt govt hosp


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->