சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இடையே மோதல்.. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்.!! - Seithipunal
Seithipunal


சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால், மீண்டும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 

இதனிடையே சசிகலா ஆன்மீகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சிக்கு சசிகலா வந்தார். அப்போது அவர் திருச்சி சமயபுரம் கோவில் மற்றும் முசிறி பகுதியில் உள்ள உத்தமர் கோவில், குணசீலம் பெருமாள் கோவில், வெள்ளூர் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை திருச்சி வடக்கு மாவட்ட அமமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பாலகுமாரன், முசிறி தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் முசிறி நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் வரவேற்றனர். 

இந்நிலையில், பாலகுமார், செந்தில்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சசிகலாவை வரவேற்க அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது என கட்சி மேலிடத்தில் இருந்து ரகசிய உத்தரவு வந்ததாகவும், ஆனால் கட்சிகளையும் மீறி நடந்து கொண்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ammk member dismissed for party


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->